புளியரை "எஸ்' வளைவுப் பகுதி சாலையில் இருந்த பெரிய பள்ளம் சீரமைக்கப்பட்டது.
தமிழகம் - கேரளம் இடையே நாள்தோறும் பால், அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஏராளமான வாகனங்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றன. புளியரை வளைவுப் பகுதியில்
ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் இந்த வாகனங்கள் பழுதாகி வந்தன. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இப்பள்ளத்தைச் சீரமைக்க
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, "தினமணி' நாளிதழில் கடந்த 15ஆம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் 3 நாள்களுக்கு முன்பு அப்பள்ளத்தைச்
சீரமைத்தனர்.