புளியங்குடி அருகே வேன் கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
புளியங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலைக்கு வியாழக்கிழமை இரவு பணியாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வேன், புளியங்குடி
அய்யாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், வேனில் பயணம் செய்த புன்னையாபுரம் பேச்சியம்மாள் (21) உள்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்
புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பேச்சியம்மாள் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புளியங்குடி போலீஸார் வழக்குப்
பதிந்து விசாரித்து வருகின்றனர்.