களக்காடு பள்ளியில் கார்கில் போரின் 20ஆவது ஆண்டு வெற்றி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, முன்னாள் ராணுவவீரர் பிரபு தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் எஸ். கலைவாணன் வரவேற்றார். கார்கில் போர் குறித்து மாணவி சரண்யா, மாணவர் தானிஸ் ஆகியோர் பேசினர்.
விழாவில், பள்ளித் தாளாளர் ஆழ்வார் கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை செய்யது மசூதுபீவி நன்றி கூறினார்.