திருநெல்வேலி

மானூர் அருகே விபத்து: இளைஞர் பலி

22nd Jul 2019 08:40 AM

ADVERTISEMENT

மானூர் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
வீ.கே.புதூரைச் சேர்ந்த விநாயகம் மகன் உதயகுமார் (29). பொறியியல் பட்டதாரியான இவர், தனது தந்தைக்கு உதவியாக ஒலி-ஒலி அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர், தனது மோட்டார் சைக்கிளில் மானூர் அருகேயுள்ள சேதுராயன்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த சுமை ஆட்டோ மோதியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த உதயகுமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT