திருநெல்வேலி

நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள்:  உருவப் படத்துக்கு மாலை அணிவிப்பு

22nd Jul 2019 10:52 AM

ADVERTISEMENT

நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். கலைப் பிரிவு தலைவர் ராஜா,  மாநில பொதுச் செயலர் வானமாமலை, மேற்கு மாவட்டப் பொருளாளர் முரளிராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நடிகர் சிவாஜி கணேசனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் நிர்வாகிகள் சொக்கலிங்ககுமார், ராஜேஷ்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல திருநெல்வேலி சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட பிரபு மன்றத் தலைவர் பாலசந்தர் தலைமையில், சிவாஜி கணேசனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தனசிங் பாண்டியன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT