திருநெல்வேலி

கபடி: திப்பணம்பட்டி அணி முதலிடம்

22nd Jul 2019 08:01 AM

ADVERTISEMENT

பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டியில் மாயாண்டி கோயில் திருவிழாவையொட்டி  இளைஞரணி சார்பில் 5ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியை தொழிலதிபர் மாயாண்டி தொடங்கி வைத்தார். இதில் முதல் பரிசு பெற்ற திப்பணம்பட்டி சாரல் அணியினருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெற்றிக்கோப்பையும், 2வது பரிசு பெற்ற பெத்தநாடார்பட்டி அசத்தல் அணியினருக்கு ரூ.13 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பையும், 3வது இடம் பெற்ற கீழப்பாவூர் அணியினருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பையும், 4வது இடம் பெற்ற பெத்தநாடார்பட்டி லக்கி ஸ்டார் அணியினருக்கு ரூ. 9 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT