திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சியின் மீளாய்வுக் கூட்டம்

22nd Jul 2019 08:00 AM

ADVERTISEMENT

எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்ட மீளாய்வுக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி தலைமை வகித்தார்.  மாவட்ட பொதுச்செயலர் வழக்குரைஞர் சர்தார் அரபாத், மாவட்ட செயலர்கள் சீனா, சேனா சர்தார், முஹம்மது கனி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக  மாநில பொதுச்செயலர் நிஜாம் முஹைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் சுல்பிகர் அலி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கடந்த ஓராண்டுக்கான கட்சியின் செயல்பாடுகள், மக்கள் பணிகளை ஆய்வு செய்து இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு  நன்றியை தெரிவித்துக்கொள்வது, புதிய மாவட்டத்துக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக துவங்க வேண்டும்; கட்சியில் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 31வரை அதிகமான செயல்வீரர்களை இணைப்பதற்காக  தீவிரமாக களப்பணியாற்றுவது; மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் ஜிந்தா மதார் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT