சிவகிரி அருகே மணல் கடத்தியதாக டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் துரைசிங்கம் தலைமையிலான போலீஸார் உள்ளாருக்கு மேற்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்தபோது, அதை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பியோடிவிட்டனராம். இதையடுத்து, அந்த லாரியை போலீஸார் சோதனையிட்டதில், அனுமதியின்றி 3 யூனிட் மணல் ஏற்றிச்செல்வது தெரியவந்தது. மேலும், ஓட்டுநர் கோவில்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன், மற்றொருவர் உள்ளாரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பதும் தெரியவந்ததாம். இதைத் தொடர்ந்து, மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.