திருநெல்வேலி

களக்காடு அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

19th Jul 2019 12:44 AM

ADVERTISEMENT


களக்காடு அருகே சாலையோரத்தில் நடமாடிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் கொண்டு  விட்டனர். 
களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளம் உப்பாற்றையொட்டி சாலையோரம் மலைப்பாம்பு நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் புகழேந்தி அறிவுறுத்தலின்பேரில், வனத்துறையினர் அங்கு சென்று ஒரு மணி நேர முயற்சிக்கு பின்னர் சுமார் 7 அடி உள்ள மலைப்பாம்பை பிடித்து களக்காடு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT