முக்கூடலில் பூ விஜேஷ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி, திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியில் நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி மாணவர்கள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர். பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதி வரை சென்றது.
பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் நவநீத கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜீவா உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.