பாளையங்கோட்டை புஷ்பலதா மித்ரா பள்ளியில் புதிய தொழிற்பயிற்சி கூட அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, பள்ளித் தலைவர் மரகதவல்லி தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் குத்துவிளக்கேற்றி தொழிற்பயிற்சிக் கூட அரங்கை திறந்து வைத்தார்.
இந்தத் தொழிற்பயிற்சிக் கூடத்தில், பேக்கரி பொருள்கள் தயாரித்தல், கைத்தறி நெசவு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமெரால்டு, அபயம் இயக்குநர் அன்வர் ஹூசைன் ஆகியோர் பேசினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துராஜேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்.