திருநெல்வேலி

பணகுடியில் வீடு புகுந்து நகை திருட்டு

16th Jul 2019 10:12 AM

ADVERTISEMENT

பணகுடியில் பூட்டிய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்க நகையை திருடிச்சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 
பணகுடி சூசையப்பர் ஆலயத் தெருவைச் சேர்ந்தவர் ஜாண்சன். இவர், கடந்த ஒருவாரமாக குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் திங்கள்கிழமை வீட்டிற்கு வந்தபோது,  வீட்டின் பின்பக்க கதவு திறந்துகிடந்ததாம். மேலும், பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம். இது தொடர்பாக ஜாண்சன் அளித்த புகாரின்பேரில், பணகுடிபோலீஸார் வழக்குப்பதிந்துவிசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT