திருநெல்வேலி

சங்கர் நகர் பள்ளியில் 129 மாணவர்களுக்கு மடிக்கணினி

15th Jul 2019 08:35 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகேயுள்ள சங்கர் நகர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு, அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் உ.கணேசன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் பங்கேற்று, நிகழாண்டு பிளஸ் 2 படிக்கும் 129 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.  
சங்கர்நகர் பகுதிச் செயலர் சங்கர், நாரணம்மாள்புரம் பகுதிச் செயலர்  செல்லப்பாண்டியன், பாளை. பகுதிச் செயலர் ஜெனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழாசிரியர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT