சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீவித்ய மகா கணபதி மற்றும் சுவாமி அம்பாள் (அரசு,வேம்பு) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை காலை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜையுடன் 2 ஆம் கால யாக பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து வேதபாராயணம் , திருமுறைப் பாராயணம் பூஜையுடன் கடம் புறப்பாடு நடைபெறுகிறது.
இதையடுத்து ஸ்ரீவித்ய மகாகணபதி மற்றும் சுவாமி,அம்பாளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயலர் மருத்துவர் வி.எஸ்.சுப்பராஜ், தாளாளர் சுப்பையா சீனிவாசன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.