திருநெல்வேலி

பாளை.யில் இன்று பொதுக்கூட்டம்: சீதாராம் யெச்சூரி பங்கேற்பு

12th Jul 2019 09:07 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார்.
திருநெல்வேலி கரையிருப்பைச் சேர்ந்தவர் மு.அசோக். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளராகப் பணியாற்றி வந்த அவரை கடந்த மாதம் சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளது. 
இக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேசுகிறார். மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT