திருநெல்வேலி

நெல்லை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் நியமனம்

12th Jul 2019 09:10 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மேற்கு மாவட்ட தமுமுக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, கட்சியின் பொதுச்செயலர் ஹைதர்அலி வெளியிட்டுள்ள அறிக்கை:  திருநெல்வேலி  மேற்கு மாவட்டத் தலைவராக  காக்கர்ஜான்ஜமால்,  செயலராக கொலம்பஸ் மீரான், பொருளாளராக செங்கை ஷெரீப், துணைத்  தலைவராக முகம்மதுஷெரீப், துணைச்செயலர்களாக சலீம், சித்திக், பீர்மைதீன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
மேலும், மருத்துவரணி மாவட்டச் செயலராக காமில்,  தொண்டரணி மாவட்டச் செயலராக மைதீன்,பொருளாளராக செங்கை உமர், ஊடக பிரிவு மாவட்ட பொருளாளராக முத்தலீப், எஸ்.எம்.ஐ. மாவட்டச் செயலராக அபாபில்மைதீன், பொருளாளராக ஆஷிக்,  உலமாக்கள் அணி மாவட்டச்  செயலராக அப்துல்முத்தலிபு, மனித உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு அணி  மாவட்டச்  செயலராக ஆதம்பின் ஹனிபா,  ஐ.பி.பி.மாவட்டச்  செயலராக மசூதுஅலி,பொருளாளராக சுமோமைதீன்,மனித வள மேம்பாட்டு அணி மாவட்டச் செயலராக ஷேக் அப்பாஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT