திருநெல்வேலி

தென்காசியில் அழகுமுத்துக்கோன் பிறந்த தின விழா

12th Jul 2019 09:14 AM

ADVERTISEMENT

தென்காசி நகர அதிமுக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 262 ஆவது பிறந்த தினம் வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது. 
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அழகுமுத்துக்கோன் படத்துக்கு நகரச் செயலர் சுடலை தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், நகர எம்.ஜி.ஆர்.மன்றச் செயலர் வெள்ளப்பாண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவுச் செயலர் மகபூப்மசூது, நிர்வாகிகள் முத்துகுமாரசாமி, மாரியப்பன், கசமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முத்தையா, கனகசபாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT