திருநெல்வேலி

இலஞ்சி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

12th Jul 2019 09:14 AM

ADVERTISEMENT

இலஞ்சி பெருந்தெருவில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் 16ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இக்கோயிலில் புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பின்னர், நவக்கிரக ஹோமம், கோ-பூஜை, மாலையில் வாஸ்து சாந்தி,  முதல் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை  ஆகியவை நடைபெற்றன. 
வியாழக்கிழமை காலை இரண்டாம் யாகசாலை பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கோயில் விமானத்தில் கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேகமும், மகா அபிஷேக  தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தென்காசி முன்னாள் அரசு வழக்குரைஞர் ஐ.கே. சுப்பிரமணியம்,விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT