திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் களப் பணியாளர்களுக்கான சுய ஊக்குவிப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசு தொழிலாளர் நலத்துறையில் செயல்படும் தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் மதுரை மண்டல அலுவலகம் மற்றும் அரசு அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து மகளிர் களப்பணியாளர்களுக்கான சுய ஊக்குவிப்பு பயிற்சி முகாமை திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடத்தியது. முகாமை காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தேசிய தொழிலாளர் நல வாரிய கல்வி அலுவலர் செண்பகராமன், ஊக்குவிப்பு , ஆளுமை மேம்பாடு போன்ற தலைப்புகளில் பயிற்சி அளித்தார். முகாமில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண் களப் பணியாளர்கள் பங்கேற்றனர்.