திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இட்டேரி அருகேயுள்ள ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கமுத்து (46). விவசாயியான இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாராம். ரெட்டியார்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ரெங்கமுத்து காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.