சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் கோமதியாபுரம் தெருவைச் சேர்ந்த கந்தவேல் மகன் ஹரிஹரகருப்பையா(49). இவர், அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வெளியே சென்றாராம். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. புகாரின்பேரில், சங்கரன்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.