பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் தமிழர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீருக்மணி ஸத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் 14ஆவது வருஷாபிஷேகம் மற்றும் பரமபுருஷ ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6.30 மணிக்கு சுப்ரபாதம், 7. 30 மணி முதல் ஏக தின லட்சார்ச்சனை, மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு விளக்கு பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. திங்கள்கிழமை (ஜூலை 8) காலை 7 மணி முதல் பஞ்ச சூக்த ஹோமம், 108 கலசம், 108 இளநீர், 108 லிட்டர் பால் கொண்டு பரம புருஷ ஆராதனை, 108 பக்தர்கள் கொண்டு வரும் நன்னீரால் அபிஷேகம், கும்பாபிஷேகம், விமானம், மூலவர் மற்றும் உத்ஸவ மூர்த்திகளுக்கு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து அன்னதானம், இரவு 7 மணிக்கு கருடசேவை, நாம சங்கீர்த்தனம் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.