ஆலங்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரவி தலைமையில் அதிகாரிகள், கடைகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை, காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவை கைப்பற்றப்பட்டு சுகாதார முறைப்படிஅழிக்கப்பட்டது. மேலும் புகையிலைபொருள்களை விற்பனைசெய்தவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது, நெட்டூர்வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதாரஆய்வாளர்கள் கங்காதரன், காந்திநாத், கணேசன், மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.