திருநெல்வேலி

மாநகர காவல் ஆணையரிடம்  அதிமுக வழக்குரைஞர்கள் மனு

4th Jul 2019 07:01 AM

ADVERTISEMENT

சமூகவலை தளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவு செய்வோர் மீது நடவடிக்கை கோரி அதிமுக வழக்குரைஞர்கள் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
அதிமுக பாளையங்கோட்டை பகுதிச் செயலர் வழக்குரைஞர் ஜெனி தலைமையில் அளிக்கப்பட்ட மனு: தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களில் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையிலும் சிலர் சமூகவலை தளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவு செய்கின்றனர். தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் பணம் கொடுத்து மோதலை உருவாக்குவதாக அவதூறு பரப்பப்படுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
மனு அளிக்கும்போது வழக்குரைஞர்கள் வி.டி. திருமலையப்பன், ரவிஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT