திருநெல்வேலி

நெல்லையில் 2 ஆவது நாளாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

4th Jul 2019 07:01 AM

ADVERTISEMENT

பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் 2 ஆவது நாளாக புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
  தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 2 ஆவது நாளாக புதன்கிழமையும் உண்ணாவிரதம் நீடித்தது.
வண்ணார்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு டிஎன்டிடபிள்யுயூ தொழிற்சங்கத் தலைவர் வி.ஆண்டபெருமாள் தலைமை வகித்தார். செயலர் எஸ்.ராஜகோபால் தொடக்கவுரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் எஸ்.முருகன்,  பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் என்.சூசைமரிய அந்தோனி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பொருளாளர் பி.நல்லையா நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT