திருநெல்வேலி

செங்கோட்டையில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

4th Jul 2019 07:30 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி செங்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
  பி.எம். கிசான் பணிக்கு கால அவகாசமும், நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; காலிப் பணியிடங்களை வெளி முகமை மூலம் நியமனம் செய்வதை அரசு கைவிட வேண்டும்; ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணி அமர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாட்சியர் ஒசானாபெர்னான்டோ தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் ஹென்றிபீட்டர் முன்னிலை வகித்தார்.  அமைப்பின் வட்டச் செயலர் சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். அமைப்பின் கிளைப் பொருளாளர் கருப்பசாமி, நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர்: செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டாரத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.  செயலர் கணேசன்,  முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  துணைத் தலைவர் சங்கரன், மாசானம் ஆகியோர் பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில்,  கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படும் அடங்கல் உரிமையை பறிப்பதை கண்டித்தும்,  இணைய தள வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT