திருநெல்வேலி

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் மரணம்

2nd Jul 2019 06:35 AM

ADVERTISEMENT

சேர்ந்தமரத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பெ.கணேசன்(35). இவரது இல்ல நிகழ்ச்சிக்காக சேர்ந்தமரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைப்பிதழ் அளிக்க கடந்த 22ஆம் தேதி வந்த இவர்,  இரவு நேரமாகிவிட்டதால் அங்கேயே தங்கியுள்ளார். அங்கு மாடிப் படியில் ஏறும்போது கணேசன் தவறி விழுந்தாராம்.  இதில் காயமடைந்த இவர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை சென்றுள்ளார். அங்கு காயத்தின் வலி அதிகரிக்கவே அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT