திருநெல்வேலி

பாளை. தலைமை அஞ்சலகத்தில் "டிஜிட்டல் இந்தியா' விழிப்புணர்வு முகாம்

2nd Jul 2019 09:42 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் "டிஜிட்டல் இந்தியா' குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு அலுவலங்களில் "டிஜிட்டல்' முறையில் பணபரிவர்த்தனை  செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, அஞ்சல் துறை சார்பில்,  "டிஜிட்டல்' முறையில்  "இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பாங்க்'   தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு, திருநெல்வேலி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சாந்தகுமார் தலைமை வகித்தார்.  அஞ்சல் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களுக்கு "டிஜிட்டல் கார்டு' வழங்கப்பட்டது. தொடர்ந்து அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில், புதிதாக காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீடு பத்திரமும், ஒருவருக்கு காப்பீட்டுக்கான இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணைக் கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், வேதராஜன், தீத்தராயப்பன்,  அஞ்சலக அதிகாரி ராமச்சந்திரன், மக்கள்தொடர்பு அதிகாரி கனகசபாபதி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி முத்துப்பேச்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT