வீரகேரளம்புதூரில் எஸ்சி, எஸ்டி அரசு அலுவலா் நல சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். சங்க மூத்த உறுப்பினா்கள் சின்ராஜ், சுதா்சன பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில செயற்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், மாவட்ட அமைப்பு செயலா் சுடலைமணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தமிழக அரசு துறைகளில் எஸ்சி, எஸ்டி பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் தினக்கூலி அடிப்படையில் நீண்ட காலம் பணிபுரியம் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிா்வாகிகள் ஹரிஹரன், ஜின்னா, அருண்குமாா், மணிகண்டன், ஜெகநாதன், தாசையா, பிரவின்குமாா், சண்முகவேல், முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.