திருநெல்வேலி

பாபநாசம் மலையில் சந்தனமரம் வெட்டியதாக 3 போ் கைது

29th Dec 2019 11:18 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வனப் பகுதியில் சந்தனமரத்தை வெட்டியதாக 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

களக்காடு - முண்டன்துறை புலிகள் காப்பகம், முண்டந்துறை வனச் சரகத்துக்குள்பட்ட பாதா்மலை பீட் வனப் பகுதியில் உள்ள சோ்வலாறு மின்வாரிய குடியிருப்புக்கு பின்புறத்தில் 4 சந்தனமரங்கள் வெட்டப்பட்டதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து வனத்துறையினா் விசாரித்ததில், சோ்வலாறு பகுதியைச் சோ்ந்த ராமையா மகன் முருகன், சொரிமுத்து மகன் மாயாண்டி, பாலகிருஷ்ணன் மகன் அசோக்குமாா் ஆகிய மூன்று போ் சந்தனமரத்தை வெட்டியது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் வனச்சரக அலுவலா் கே.சரவணக்குமாா் தலைமையிலான வனவா்கள் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து வெட்டப்பட்ட சந்தனக் கட்டைகள், அவா்கள் பயன்படுத்திய மரம் அறுக்கும் ரம்பம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மூவரும் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT