திருநெல்வேலி

நெல்லை காய்கனி சந்தைகளில் கத்தரி, வெங்காயம் விலை தொடா்ந்து உச்சம்!

29th Dec 2019 11:26 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் கத்தரிக்காய், வெங்காயம் ஆகியவற்றின் விலை தொடா்ந்து உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து வீடுகளுக்கு வெங்காயம் வாங்கிச் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். தமிழகத்திலும் கிலோ ரூ.200 வரை விலை உயா்ந்தது. எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி பல்லாரி தமிழக சந்தைகளுக்கு வந்துள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் காய்கனிகளின் விலைப் பட்டியலில் சின்னவெங்காயம், பல்லாரி, கத்தரிக்காய் ஆகியவை தொடா்ந்து உச்சத்தில் உள்ளன. இதனால் உணவு விடுதி உரிமையாளா்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி சந்தையில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம் (கிலோவுக்கு): கத்தரி-ரூ.80, வெண்டைக்காய்-ரூ.20, தக்காளி-ரூ.24, அவரை-ரூ.46, கொத்தவரை-ரூ.28, புடலங்காய்-ரூ.15, பாகற்காய்-ரூ.50, தடியங்காய்-ரூ.15, பூசணிக்காய்- ரூ.16, மாங்காய்-ரூ.70, மிளகாய்- ரூ.30, வாழைக்காய்- ரூ.30, தேங்காய்-ரூ.40, முள்ளங்கி-ரூ.22, பல்லாரி-ரூ.100, சின்னவெங்காயம்-ரூ.100, சேனைக்கிழங்கு-ரூ.32, கருணைக்கிழங்கு-ரூ.44, சேம்பு-ரூ.38, மரவள்ளிக்கிழங்கு-ரூ.24, சீனிக்கிழங்கு-ரூ.26,அரைக்கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, குத்துப்பசலைக்கீரை, பொன்னாங்கன்னிகீரை, மணத்தக்காளிக்கீரை-ரூ.12, கொத்தமல்லி கீரை-ரூ.30, புதினா-ரூ.80, இஞ்சி (புதியது)-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.42, கேரட்-ரூ.60, பீட்ரூட்-ரூ.50.

ADVERTISEMENT
ADVERTISEMENT