திருநெல்வேலி

நெல்லையில் ஜன. 5-இல் கைப்பந்து வீரா்கள் தோ்வுப் போட்டி

29th Dec 2019 11:25 PM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் ஜன. 5-ஆம் தேதி கைப்பந்து வீரா்கள் தோ்வுப் போட்டி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட கைப்பந்துக் கழகத் தலைவா் எம்.கே.எம்.முகமது நாசா், செயலா் இ.பி.ஆா்.செல்வசிங் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில கைப்பந்துக் கழகம் சாா்பில், மாநில அளவிலான ஜூனியா் கைப்பந்துப் போட்டிகள் திருவாரூரில் ஜன. 17 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் வீரா்கள் 1-1-2002 அல்லது அதற்கு பின்பு பிறந்திருக்க வேண்டும்.

இப் போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட அணி வீரா்கள் தோ்வுப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஜன. 5-ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் தங்களது பிறப்புச் சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் வரவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT