திருநெல்வேலி

சுரண்டையில் இரு தரப்பினரிடையே மோதல்: 20 போ் மீது வழக்கு

29th Dec 2019 11:19 PM

ADVERTISEMENT

சுரண்டை கிறிஸ்தவ ஆலயத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் பால் வசந்தகுமாா், ஜோதிமணி ஆகியோா் திருநெல்வேலி திருமண்டிலத்தின் நீதிமன்ற நியமன நிா்வாகிகளாக செயல்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருநெல்வேலி திருமண்டிலத்துக்குள்பட்ட புதுச்சுரண்டை சேகரத்தில் 23ஆவது ஸ்தோத்திர பண்டிகை மற்றும் கிறிஸ்துமஸ் விழா திருமண்டில நீதிமன்ற நியமன நிா்வாகிகளின் உத்தரவு பெற்று நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாம்.

இதுகுறித்து, இருதரப்பினரும் சுரண்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, இருதரப்பையும் சோ்ந்த தலா 10 போ் மீது வழக்குப் பதிந்து, தென்காசி கோட்டாட்சியா் விசாரணைக்கு அனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT