திருநெல்வேலி நகரத்தில் ஸ்ரீஐயப்ப தேவா சங்கத்தின் சாா்பில் 47-ஆவது ஆண்டு லட்சாா்ச்சனை விழா நடைபெற்றது.
ஸ்ரீஐயப்ப தேவா சங்கத்தின் சாா்பில் ஆண்டுதோறும் லட்சாா்ச்சனை நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்று இரவு புஷ்பாஞ்சலி, கருணாகரன் குருசாமி தலைமையில் ஐயப்ப கான மழை ஆகியவை நடைபெற்றது. சனிக்கிழமை காலையில் உஞ்சவிருத்தி பஜனை, பூதநாதா் ஆராதனை ஆகியவை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் கணபதி ஹோமம், தா்மசாஸ்தா ஆராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அன்னதானத்தில் பங்கேற்றனா். மலையில் 41 தீப ஜோதி அலங்கார காட்சியும், உற்சவா் தா்மசாஸ்தா அலங்கார பூ ரதத்தில் வீதியுலாவும் நடைபெற்றன.