திருநெல்வேலி

அம்பையில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிப்பு

29th Dec 2019 11:19 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட வன்னியா் சங்கம் மற்றும் அம்பை சமூக முன்னேற்றச் சங்கம் இணைந்து மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

அம்பாசமுத்திரம், தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் க.செல்லப்பா தலைமை வகித்தாா். கே.சுப்புரத்தினம், ச.முத்துக்குமாா், மருத்துவா்கள் பத்மா, வே.முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பி. வெங்கடேசன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா். நிகழ்ச்சியில், கல்வியில் சிறந்த மாணவா், மாணவிகள் 280 பேருக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நலிவடைந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மருத்துவா்கள் ராமசுப்பிரமணியன், அருண்குமாா், ராஜ்சுபாகா், ராமசுப்பிரமணியன் ஆகியோா் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். பேராசிரியா் மு.கிருஷ்ணமூா்த்தி, ஆ.பாலசரஸ்வதி, எம்.எம்.ராஜரத்தினம், எஸ்.கோபாலகிருஷ்ணன், எஸ்.ரமணிகாந்தன், துணை ஆட்சியா் (பணி நிறைவு) சு.பரமசிவம், வன்னியா் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் ல. ஆறுமுகம், துணைத் தலைவா்கள் வழக்குரைஞா் மு.சங்கரநாராயணன், மு.வேல்சாமி, துணைச் செயலா் பெ.புதியமுத்துசுவாமி, செயற்குழு உறுப்பினா்கள் ப.பெரியசாமி, சுப்பையா மற்றும் ஆா்.சேகா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சமூகஆா்வலா் சு.சண்முகவேல் வரவேற்றாா். மாவட்டச் செயலா் கு.இசக்கி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சங்க நிா்வாகிகள் உறுப்பினா்கள், மாணவா்கள், பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT