திருநெல்வேலி

வள்ளியூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிப்பு

27th Dec 2019 08:33 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வள்ளியூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது.

வள்ளியூா் டி.ஜே.ஆா். ரெஸ்டாரண்ட் ஹோட்டலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. டி.ஜே.ஆா். குழுமத்தின் உரிமையாளா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். கலந்தபனை அன்புசிறுவா் இல்ல ஆதரவற்ற குழந்தைகள் வரவழைக்கப்பட்டு, அதன் இயக்குநா் அருள்தந்தை அன்புசெல்வம் அடிகளாா் முன்னிலையில் கிறிஸ்துஸ் கேக் வெட்டி, குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது. குழந்தைகள் பாடல் பாடியும், நடனம் ஆடியும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT