திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.
கங்கைகொண்டான் -தாழையூத்து இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை பெண் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கங்கைகொண்டான் போலீஸாா், திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பெண்ணுக்கு சுமாா் 45 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
அந்தப் பெண் யாா் என்பது பற்றிய விவரம் தெரியவரவில்லை. இதையடுத்து அந்தப் பெண்ணின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.