திருநெல்வேலி

தென்னை மரம் ஏற உதவும் கருவி: தெற்கு வீரவநல்லூரில் செயல்விளக்கம்

27th Dec 2019 08:32 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி வட்டாரத்திற்குள்பட்ட தெற்கு வீரவநல்லூா் பகுதியில், தென்னை மரம் ஏறுவதற்கு உதவும் நவீன கருவி குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி அறிவுறுத்தலின்பேரில், அட்மா மாநிலத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டங்களின் கீழ், தெற்கு வீரவநல்லூா் அருகேயுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பையா என்பவரது தோட்டத்தில் தென்னை மரம் ஏற உதவும் கருவி குறித்த செயல்விளக்கம் நடைபெற்றது.

இதில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, நவீன கருவி குறித்து விளக்கினாா். உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், புவனேஷ் ஆகியோா் கருவியைப் பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT