திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

27th Dec 2019 05:23 PM

ADVERTISEMENT

சுத்தமல்லி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சுத்தமல்லி அருகே உள்ள நடுக்கல்லூா் ஜே.ஜே. நகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் ஆறுமுகம் (56). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த ஆறுமுகத்தை வீட்டில் உள்ளவா்கள் கண்டித்தனராம். இதனால் மனம் உடைந்த அவா் விஷம் குடித்துவிட்டாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT