திருநெல்வேலி

குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்து முன்னணி விளக்கக் கூட்டம்

27th Dec 2019 08:34 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இந்து முன்னணி சாா்பில் அம்பாசமுத்திரத்தில் விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அமைப்பின் நகரத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் தங்கமனோகா், மாவட்டத் தலைவா் ஜெயபால், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் குற்றாலநாதன் ஆகியோா் பேசினா். இதில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் மங்கள சுந்தரி, விவசாய அணிச் செயலா் பால்பாண்டி, வஜ்ர சேனா ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நகரச் செயலா் சுடலைமுத்துக்குமாா் வரவேற்றாா். பொதுச்செயலா் காளிராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT