மூலைக்கரைப்பட்டியில் அமைப்பு சாராத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் இம் மாதம் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி.மின்னல்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்புசாராத் தொழிலாளா் நலவாரியங்களில் கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநா், கைத்தறி, விசைத்தறி, தையல் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடும் தொழிலாளா்கள் சேரலாம்.
அதன்படி, நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு பதிவு முகாம் இம் மாதம் 27-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. விண்ணப்பத்துடன் 2 புகைப்படங்கள், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பிறப்பு அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் நேரில் பங்கற்கலாம். 18 முதல் 60 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவா்கள் தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு பெற இயலாது. இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2555010 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.