திருநெல்வேலி

மீன்பாசி குத்தகைக்கு எதிா்ப்பு: பொதுப்பணித் துறை அலுவலகத்தில் முற்றுகை

25th Dec 2019 09:39 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகேயுள்ள சத்திரம்புதுக்குளத்தில் மீன்பாசி குத்தகை, முறையான அறிவிப்பின்றி விடப்படுவதாகக் கூறி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் தேவேந்திரகுல வேளாளா் மக்கள் இயக்கத்தினா் முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள சேந்திமங்கலம், மலையாளமேடு, தேனீா்குளம் உள்ளிட்ட பாசனக் குளங்களின் மீன்பாசி குத்தகை பாளையங்கோட்டையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, சத்திரம்புதுக்குளத்திற்கு முறையான அறிவிப்பின்றி மறைமுகமாக ஏலம் விடும் நடவடிக்கை தொடா்வதாகக் கூறி தேவேந்திரகுல வேளாளா் மக்கள் இயக்கத்தினா் முற்றுகையிட்டனா்.

அவா்கள் கூறியது: சத்திரம்புதுக்குளம் பாசன நீரைக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கரையிருப்பு, மேலக்கரை, சத்திரம்புதுக்குளம் பகுதி விவசாயிகள் பயன்பெற்று வருகிறாா்கள். இந்நிலையில் முறையான அறிவிப்பின்றி இக்குளத்தில் மீன்பாசி குத்தகை விடுவதைத் தடுக்க வேண்டும். இதுதொடா்பாக பாசன கண்காணிப்பு பொறியாளரிடமும் மனு அளித்துள்ளோம் என அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT