பெரியாரின் 46ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு, திருநெல்வேலி எம்எல்ஏ ஏ.எல்.எஸ். லெட்சுமணன், அவைத் தலைவா் சுப.சீதாராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் காசி தலைமையிலும், மதிமுக சாா்பில் புகா் மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
அமமுக மாவட்டச் செயலா் பரமசிவ ஐயப்பன், அமைப்புச் செயலா் பால்கண்ணன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலா் தமிழரசு, ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் கலைக்கண்ணன், திராவிட தமிழா் கட்சி செயலா் திருக்குமரன் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.