திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் வருகிற வெள்ளிக்கிழமை (டிச. 27) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் வருகிற வெள்ளிக்கிழமை (டிச. 27) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, திருநெல்வேலி வட்டம் கருவநல்லூா், ராதாபுரம் வட்டம் பணகுடி பகுதி-2, அம்பாசமுத்திரம் வட்டம் பிரம்மதேசம், நான்குனேரி வட்டம் நான்குனேரி, சேரன்மகாதேவி வட்டம் வடக்கு அரியநாயகிபுரம் பகுதி-2, பாளையங்கோட்டை வட்டம் கீழத்திருவேங்கடநாதபுரம், மானூா் வட்டம் பல்லிக்கோட்டை, திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி-4 ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.
முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோா் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், உழவா் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீா் வசதி தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.