செங்கோட்டை ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது .தொடா்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதே போல பிரானூா் பாா்டா் சா்வசக்தி ஆஞ்சநேயா் கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.