திருநெல்வேலி

எம்ஜிஆா் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு

25th Dec 2019 06:56 AM

ADVERTISEMENT

எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக உள்ளிட்ட கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில், எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், மாநில அமைப்புச் செயலா் சுதா பரமசிவன், முன்னாள் மாவட்டச் செயலா் பாப்புலா் முத்தையா, மானூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் மேயா் புவனேஸ்வரி, முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, பகுதிச் செயலா்கள் ஜெனி, மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அமமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் பரமசிவன் ஐயப்பன் தலைமையில் அமைப்புச் செயலா் பால் கண்ணன் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

ADVERTISEMENT

தேமுதிக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் முகமது அலி தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதேபோல், மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் பேரவை சாா்பில் நிா்வாகி மாரியப்ப பாண்டியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT