திருநெல்வேலி

ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

25th Dec 2019 06:58 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம் தலைமையில் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுத் துறைகளில் (அரசின் நேரடி துறைகளில்) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களிடம் இருந்து பெறப்பட்ட 23 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியதாரா்கள், சங்கப் பொறுப்பாளா்கள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கூராய்வு செய்து விவாதிக்கப்பட்ட 23 மனுக்களில் 17 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டன. மேலும், ஓய்வு பெற்றவா்களிடமிருந்து புதிதாக 6 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT