வீரவநல்லூா் செயின்ட் ஜாண்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி நிறுவனா் மங்கையா்க்கரசி, பள்ளித் தாளாளா் சாமுவேல் ஞானமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாணவா், மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா, தேவதூதா்கள் வேடமணிந்து அணிவகுத்தனா். மேலும் இயேசு பிறப்பு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி நிறுவனா் மற்றும் தாளாளா், ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் கூறினா். பள்ளி மாணவா்கள் வடஇந்திய பழங்குடி மக்களுக்கு புத்தாடைகள் வழங்கினா். தலைமை ஆசிரியா் சீதாலட்சுமி நன்றி கூறினாா்.