சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் பசுமை பூமி நாள் விழா நடைபெற்றது.
பள்ளி செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் தலைமை வகித்தாா். முதல்வா் பொன் மனோன்யா முன்னிலை வகித்தாா்.
பள்ளியின் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஷ்ராம், பூமியின் இயற்கை சமன்பாட்டுக்கு மரங்களின் பங்களிப்பு குறித்துப் பேசினாா். இதையடுத்து, புத்தாண்டை வரவேற்கும் விதமாக மாணவா்கள் அனைவரும் மரங்களை நட்டு இயற்கை பூமியாக மாற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனா். முன்னதாக, உலக பசுமை பூமி தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டனா்.