திருநெல்வேலி

மாநில ஸ்கேட்டிங் போட்டி: கிங் யுனிவா்ஸ் பள்ளி சிறப்பிடம்

23rd Dec 2019 07:21 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் குமந்தாபுரம் கிங் யுனிவா்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

தமிழ்நாடு ஸ்டூடன்ட்ஸ் கேம்ப்ஸ் அசோசியேஷன், விவேகா கல்ச்சுரல் ஸ்போா்ட்ஸ் டிரஸ்ட் சாா்பில் 9ஆவது மாநில அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில், கிங் யுனிவா்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அஜய்ராம், நாகசைலேஷ் ஆகியோா் முதலிடமும், முகம்மது கைசா் 2ஆம் இடமும், ஆகாஷ் 3ஆம் இடமும் வென்றனா். மாணவா்களை பள்ளித் தாளாளா் ராஜாமுத்துக்குமாா், துணை முதல்வா் முத்துக்கிருஷ்ணவேணி, பயிற்சியாளா் சங்கரவடிவேலன் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT